வாராயோ இயேசுவண்டை – Varayo Yesuvandai
வாராயோ இயேசுவண்டை – Varayo Yesuvandai
வாராயோ இயேசுவண்டை
தாராயோ உன் உள்ளத்தை (2)
1. பாழும் உலகின் பாதங்களில்
பாவி சிக்குண்டலை கின்றாயோ
பாசம் மிகுந்து பாரில் உதித்த
நேசர் இயேசு சத்தம் கேள்
2. செல்வப் பற்றினால் சீர் கேட்டைந்து
நல்லப் பாதையை மறந்தாயோ
இல்லான் போலவே இகத்தில் திரிந்த
வல்ல இயேசு சத்தம் கேள்
3. ஈசனோடு உள்ள பாச உறவை
நீச துரோகத்தால் இழந்தாயோ
நீசச் சிலுவை மீதில் தொங்கின
நேசர் இயேசு சத்தம் கேள்
4. நன்றி மறந்து நாட்டைத் துறந்து
பன்றி தவிட்டை உண்கின்றாயோ
இன்று உன்னையே நின்று அழைக்கும்
இன்ப இயேசு சத்தம் கேள்
5. பாவச் சேற்றினில் உழன்று தவித்து
ஜீவ பாதையை மறந்தாயோ
மேவி உன்னையும் மீட்க மரித்த
தேவன் இயேசு சத்தம் கேள்