வாழ்வல்லவோ இது வளமான வாழ்வு -Vaazhvallavo ithu vazhamana
வாழ்வல்லவோ இது வளமான வாழ்வு
வாழ்வின் பகுதிகள் எல்லாம் இயேசுவால்
வளமாய் வளர்ச்சி பெறும் (2)
1. பாவத்தால் தேயும் உன் உள்ளமே
சாபத்தில் தேடும் மெய் நிம்மதி
இன்றைக்கே ஈவார் நல் மன மாற்றம்
ஏற்றுக்கொள் இயேசுவின் மன்னிப்பையே (2) – வாழ்வல்லவோ
2. கட்டின்றி ஓடும் உன் வாழ்வினை
கட்டாறாய்ப் பாயும் உன் தாலந்தை
மட்டின்றி ஊரும் தம் அன்பினாலே
மாற்றியே மாற்றுவார் பிறரையே (2) – வாழ்வல்லவோ
3. ஏதேனில் பாய்ந்த நல்வாழ்விது
கல்வாரி மீட்ட நல்வாழ்விது
என்றுமே நாம் வாழ் இவ்வாழ்வினை வாழ
மீண்டும் நம் இயேசுவே வருகின்றார் (2) – வாழ்வல்லவோ