
வாழ்வை அளிக்கும் வல்லவா- Vazhvai Azhikkum Vallava
Deal Score0
Shop Now: Bible, songs & etc
வாழ்வை அளிக்கும் வல்லவா
தாழ்ந்த என்னுள்ளமே
வாழ்வின் ஒளியை ஏற்றவே
எழுந்து வாருமே
ஏனோ இந்த பாசமே
ஏழை என்னிடமே
எண்ணில்லாத பாவமே
புரிந்த பாவி மேல்
உலகம் யாவும் வெறுமையே
உன்னை யான் பெறும்போது
உறவு என்று இல்லை உன்
உறவு வந்ததால்
தனிமை ஒன்றே ஏங்கினேன்
துணையாய் நீ வந்தாய்
அமைதியின்றி ஏங்கினேன்
அதுவும் நீ என்றாய்