வாவா ஜெகதீசா வரந்தரவே – Va va Jegathesa varantharave

Deal Score0
Deal Score0

வாவா ஜெகதீசா வரந்தரவே – Va va Jegathesa varantharave

பல்லவி

வாவா ஜெகதீசா – வரந்தரவே
வாவா ஜெகதீசா – இதுசமயம்
வாவா ஜெகதீசா – உன் மகிமையை
யார் யார் யார் அறிவார்?

சரணங்கள்

1. காவிற் கனிபுசித்த ஏவையின் மக்களுக்காய்
பூவில் கனி பாலுண்டவா, புகல் சொல்லாதே – வாவா

2. இரண்டு மூன்று பேர் கூடி தொண்டு புரியும் வேளை
அண்டையில் வருவேன் என்றீரே, அட்டி சொல்லாதே – வாவா

3. பன்னிரு சீஷர்களும் பரிசுத்த ஆவிபெற்று
பற்பல பாஷைகள் பேசினார், பிரசங்கம் செய்ய – வாவா

4. கேளுங்கள் அப்பொழுது கிருபையாகக் கொடுப்பேன்
தட்டுங்கள் திறப்பேன் என்றீரே, தாமதமென்ன – வாவா

5. மோசே முதலாயுள்ள தீர்க்கர் முனிவருக்கும்
ஆசீர்வாதங் கொடுத்தவா அருள் புரிய – வாவா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo