NITHTHIYA KANNMALAI – நித்திய கன்மலை எனக்காய்

Deal Score+3
Deal Score+3

NITHTHIYA KANNMALAI – நித்திய கன்மலை எனக்காய்

பல்லவி

நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்தது
நேயமாய் மறைந்துய்குவேன்

சரணங்கள்

1. சுத்த உதிரமும் நீரும் வடிந்தது,
தூயன் விலாவினின்று;-அதால்
சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்
சுகமாக வாழ்வேனே. – நித்திய

2. என்றன் கிரியைகளால் தேவ நீதிக்கு
ஈடு நான் செய்வதில்லை;-தினம்
சிந்துகினிங் கண்ணீர், ஏதேது செய்கினும்,
தீங்கு செய்வதில்லை – நித்திய

3. கொண்டுவரக் கையிலொன்று மில்லை, உன்
குருசுடன்தான் ஒன்றினேன்;-குருதி
கொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்,
கோவே; அல்லாது துய்ந்திடேன் – நித்திய

4. ஜீவனிருக்கையில், சாவில் கண் மூடுகையில்,
தெரியாவுலகிற் செல்கையில்,-ஒளி
மேவு பத்ராசன் மீதுனைக் காண்கையில்
விரைந்துனில் மறைந்துய்குவேன் – நித்திய

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo