என்னை கொண்டு என்ன செய்ய – Ennai Kondu Enna Seiya

Deal Score0
Deal Score0

என்னை கொண்டு என்ன செய்ய – Ennai Kondu Enna Seiya

என்னை கொண்டு என்ன செய்ய
சித்தமாய் இருக்கிறீர்.
எங்கு செல்ல என்ன சொல்ல
சொல்லித்தாரும் தகப்பனே.
சொல்லி சொல்லி உம் அன்பை
ருசித்திட வேண்டும்
பேசி பேசி உம் அன்பை பகிர்ந்திட வேண்டும் – 2

1. எனக்கு நீர் தந்த அபிஷேகம் அது
நுகங்களை முறித்திடட்டும்
எனக்கு நீர் தந்த கிருபை அது
பிறருக்காய் பயன்படட்டும்.
மெழுகு போல நான் உருகி பிறர்
வாழ்ந்திட ஒளி தர வேண்டும்.
பிறர் வாழ்ந்திட ஒளி தர வேண்டும் -2

2.பட்சிக்கும் அக்கினி நீரே பாவங்களைச் சுட்டெரித்திடும்
அநியாயத் தீர்ப்பு நீங்கி நியாயத் தீர்ப்பு நிறைவேறட்டும்
உமக்கு முன்பாக நிற்கும் பாத்திரமாய் மாற வேண்டும்.
பாத்திரமாய் மாற வேண்டும் -2

3. நீர் செய்ய நினைத்த காரியம் ஒன்றுமே தடை படாது
பூத்து குலுங்கும் மரமாய் பிறருக்கு நிழல் தர வேண்டும்
தேசம் துளிர் விட்டுச் செழிக்க உம் இரக்கம் வேண்டும் ஐயா
உம் இரக்கம் வேண்டும் ஐயா – 2
– என்னை கொண்டு என்னசெய்ய

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo