
என் வாழ்வின் குறைகளெல்லாம் – En Valvin Kuraigal Yellam
என் வாழ்வின் குறைகளெல்லாம் – En Valvin Kuraigal Yellam
என் வாழ்வின் குறைகளெல்லாம் நன்றாக அறிந்தவரே
என் இதய எண்ணமெல்லாம் அறிந்தவராய் இருப்பவரே
உமக்கு மறைவானது ஒன்றுமில்லையே
உமக்கு தெரியாதது ஒன்றும் இல்லையே
சிங்கத்தின் கைக்கு என்னைத் தப்புவித்தீர்
எரிகின்ற அக்கினியில் பாதுகாத்தீர்
1. உம் கூடார மறைவினிலே
ஒளித்து வைத்து காப்பவரே
எனக்காக வருபவரே
என்னை கண்மணிபோல் காப்பவரே
2. உமக்காக என்னை தெரிந்து கொண்டீர்
உம் உள்ளங்கையில் என்னை வரைந்து உள்ளீர்
உமக்காக வாழ்ந்திட தான்
உம் வல்லமையால் நிரப்பிடுமே
3. எப்பொழுதும் உம்மை நம்பிடுவேன்
உம் தோள்மீது சாய்ந்திடுவேன்
உம்மோடு இருந்திட தான்
நான் எந்நாளும் விரும்புகிறேன்