மகா இக்கட்டாம் ஆபத்து – Maha Ikkattaam Aabathu
மகா இக்கட்டாம் ஆபத்து – Maha Ikkattaam Aabathu
1.மகா இக்கட்டாம் ஆபத்து
உண்டாகி, எங்கள் மனது
ஓர் யோசனையும் இன்றியே
கலங்கி வாடுகின்றதே.
2.கர்த்தாவே, மனத்தாழ்மையாய்
உம் பாதம் சேர்ந்து ஏகமாய்
அடி பணிந்து கெஞ்சுதல்
அடியாருக்கு ஆறுதல்.
3.நொறுக்கப்பட்ட நெஞ்சோடே
வந்தோம்; இரங்கும், கர்த்தரே;
ஆ! கோபமாய் இராதேயும்,
மன்னிப்பை ஈந்து தற்காரும்,
4.இக்கட்டில் யேசு நாமத்தில்
மன்றாடி னோரைத் தயவாய்
ரட்சிப்போம் என்று தேவரீர்
நல்வாக்குத் தத்தம் செய்திட்டீர்.
5.ஆ! எங்கள் மீறுதல்களைப்
பாராமல், யேசு க்றிஸ்துவைப்
பார்த்தெங்கள் வாதை யாவையும்
அன்பாக நீக்கிருளும்.
Maha Ikkattaam Aabathu song lyrics in English
1.Maha Ikkattaam Aabathu
Undaagi Engal Manathu
Oor Yosanaiyum Intriyae
Kalangi Vaadukintrathae
2.Karthavae Manathaazhmaiyaai
Um Paatham Searnthu Yeagamaai
Adi Paninthu Kenjuthal
Adiyaarukku Aaruthal
3.Norukkapatta Nenjodae
Vanthom Erangum Kartharae
Aa Kobamaai Iratheayum
Mannippai Eenthu Tharkaarum
4.Ikkattil Yesu Naamathil
Mantraadinorai Thayavaai
Ratchippom Entru Devareer
Nalvakku Thaththam Seithitteer
5.Aa Engal Meeruthalgalai
Paaraamal Yesu Kiristhuvai
Paarthengal Vaathai Yaavaiyum
Anbaaga Neekkiyarulum