இந்நாள் ரட்சிப்பு – Innaal Ratchippu

Deal Score+2
Deal Score+2

இந்நாள் ரட்சிப்பு – Innaal Ratchippu

இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்

பல்லவி

இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்
ஏற்ற நல் நாள் இ ஏற்ற நல் நாள்

அனுபல்லவி

சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து
பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத

சரணங்கள்

1. சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் – தேவ
சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன் – இந்நாள்

2. வாடித் திகைத்துப் புலம்பாதே – உன்தன்
மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே – இந்நாள்

3. உலகச் சிநேகம் வெகு கேடு – அதற்
குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத்தேடு – இந்நாள்

4. இன்றுன் இரட்சகரிடம் திரும்பு – அவர்
இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு – இந்நாள்

5. இனிமேலாகட்டும் என் றெண்ணாதே – பவ
இச்சைக் குட்பட்டால் திரும்ப ஒண்ணாதே – இந்நாள்

6. கிறிஸ் தேசுவை உற்றுப்பாரு – அவர்
கிருபையாய்ச் சிந்தின ரத்தத்தைச் சேரு – இந்நாள்

7. பாவங்கள் அறச் சுத்திகரிப்பார் – உனைப்
பரிசுத்த வஸ்திரத்தால் அலங்கரிப்பார் – இந்நாள்

8. மகிமை நிறைந்த கிரீடஞ் சூடி – நித்திய
வாழ்வை அருள்வார் உனக்கின்பங் கொண்டாடி – இந்நாள்

9. ஏசுபெருமானை நீ நம்பு – அவர்
என்றென்றைக்கும் உனக் கிரட்சிப்பின் கொம்பு – இந்நாள்

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
If any of you lack wisdom, let him ask of God, that giveth to all men liberally, and upbraideth not; and it shall be given him.
யாக்கோபு :James: 1:5

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo