அந்த நாள் பாக்கிய நாள் – Antha Naal Bakkiya Naal
அந்த நாள் பாக்கிய நாள் – Antha Naal Bakkiya Naal
பல்லவி
அந்த நாள் பாக்கிய நாள் – நான் மீட்கப்பட்ட
அந்த நாள் பாக்கிய நாள்
அனுபல்லவி
அந்தநாள் ஆனந்தநாள் அருமை இரட்சகரென்னை
அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் – அந்த
சரணங்கள்
1. அன்றே எனக்குப் பேதித்தார் – அவர் வழியில்
அனு தினம் செல்லக் கற்பித்தார்;
என்றும் அவர் மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார் என் இரட்சகர் எங்கும் எடுத்துரைப்பேனே (பிராஸ்தாபிப்பேனே) – அந்த
2. என்றனை அன்றே இழுத்தார்- தமதன்பினால்
இசைவாய்த் தம்முடன் இணைத்தார்;
சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு
இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன் – அந்த
3. ஆறுதல்களால் நிறைந்தேன் – அளவில்லாத
ஆசிகளினால் மகிழ்ந்தேன்;
தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன் – அந்த
4. அந்நாளில் வாக்குப் பண்ணினேன் – உறுதியாக
எந்நாளும் நான் புதுப்பிப்பேன்;
சொன்ன இவ்வாக்கை நிதம் சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத பலம் தாராய் என்னையாட்கொண்ட தேவா – அந்த
Antha Naal Bakkiya Naal song lyrics in English
Antha Naal Bakkiya Naal Naan Meetkkapatta
Antha Naal Bakkiya Naal
Antha Naal Aanantha Naal Arumai Ratchakarennai
Anbodalaithaneathu Asuthangal Neekkina Naa
1.Antrae Enakku Pothithaar Avar Valiyil
Anuthinam Sella Karpiththaar
Entrum Avar Mael Saarthae Inba Jeeviyam Seiya
Yeavinaar En Ratchkar Engum Pirasthathippeanae
2.Annaalil Vaakku Panninean Uruthiyaga
Ennaalum Naan Puthuppiean
Sonna Evvaakkai Nitham Suththamaai Niraivettra
Unnatha Balam Thaaraai Ennaiyaatkonda Devaa
3.Entranai Antrae Eluththaar Thamathanbinaal
Isaivaai Thammudan Inaithaar
Sontham Naan Avarukku Sontham Avar Enakku
Intha Uruthi Panni Ini Aikkiyam Petteran
4.Aaruthalgalaal Nirainthean Alavillatha
Aasikalinaal Magilnthean
Thaarumaaran ulla Maaruthal Adainthu
Maaratha Yesuvinil Magimaiyaai Thanga Petteran.