Theeyan Aayinean Iyya Lyrics – தீயன் ஆயினேன் ஐயா
Theeyan Aayinean Iyya Lyrics – தீயன் ஆயினேன் ஐயா
தீயன் ஆயினேன் ஐயா எளியேன்
தீவினை அனைத்தும் தீரும்
தேவரீர் மேலே என் பாரம்
தீயன் ஆயினேன், ஐயா
அனுபல்லவி
மாயவலை வீசுவலை பேயின் வினைதீர
நேயமுடனே உறுசகாயனாய் எமக்கென்றிங்கு
நிச்சயித்தெழுந்த எங்கள்
அச்சயா, திருக்குமாரா – தீய
சரணங்கள்
1.நன்மை செய்யவே நான் நினைத்தாலும், என்
தன்மை வேறதாய்ப் பின்னம் ஆகுமே
என்ன என்தன் நீதி கந்தை
அன்ன அருவருப்பாமே
எத்தனை ஆனாலும் உன்தன்
சித்தம் வைத்தனுக்கிரகிப்பாய் – தீய
2.பாவமீறி என் ஆவி தள்ளாடி நற்
சீவ பாதையைத் தாவி ஓடியே
ஆவலாய் அழி வுறும் துர்ச்
சாவின் வழியே தொடர்ந்து
அக்கிரமச் செய்கைகளில்
சிக்கினேன் ஐயா, உன் தஞ்சம் – தீய
3.தீது செய்பவன் தேவன் முன்னே உத்ர
வாதியாய் உறு நீதம் உண்டென
போதம் உற வேத நெறி
ஓதிய ஏசு நாதா, உன்
புண்ணியத்தால் என்னை உய்யப்
பண்ணிடக் கிருபை செய்வாய் – தீய
Theeyan Aayinean Iyya Lyrics in English
Theeyan Aayinean Iyya Eliyean
Theevinai Anaiththum Theerum
Devareer Mealae En Paaram
Theeyan Aayinean Iyya
Maayavalai Veesuvalai Peayin Vinaitheera
Neayamudanae Urusahaayanaai Emakkontringu
Nitchayitheluntha Engal
Atchayaa Thirukumaara theeya
1.Nanmai Seiyavae Naan Ninaiththaalum En
Thanmai Vearaathaai Pinnam Aagumae
Enna En Than Neethi Kanthai
Anna Aruvaruppaamae
Eththanai Aanaalum Un Than
Siththam Vaiththanukirakippaai
2.Paava Meeri En Aavi Thaaladi Nar
Seeva Paathaiyai Thaavi Oodiyae
Aavalaai Azhiyurum Thur
Saavin Vazhiyae Thodarnthu
Akkirama Seikaikalil
Sikkinean Aiyaa Un Thanjam
3.Theethu Seibavan Devan Munnae Uthra
Vaathiyaai Uru Neetham Undena
Potham Ura Vedha Neari
Oothiya Yesu Naatha UN
Punniyaththaal Ennai Uiyya
Pannida Kirubai Seivaai