![Paaviyaam Ennai Meavippar Lyrics – பாவியாம் எனை மேவிப்பார்](https://www.christianmedias.com/wp-content/themes/rehub-theme/images/default/noimage_500_500.png)
Paaviyaam Ennai Meavippar Lyrics – பாவியாம் எனை மேவிப்பார்
Paaviyaam Ennai Meavippar Lyrics – பாவியாம் எனை மேவிப்பார்
1. பாவியாம் எனை மேவிப்பார் ஐயா யேசுநாதா ஸ்வாமி
பட்சமாக என் பாவந்தீர் ஐயா.
2. தேவத்ரோகி பாவி நான் அன்றோ – யேசுநாதா ஸ்வாமி
சீர்பதம் துணையன்றி வேறுண்டோ?
3. தீவினையுறு சாவு மேவிற்றே – யேசுநாதா ஸ்வாமி
சித்தம் வைத்திரட்சித்தாள் ஏழையே.
4. சஞ்சல மிகுந்தஞ்சல் ஆயினேன் – யேசுநாதா ஸ்வாமி
தங்கும் உனை விட்டெங்கே ஏகுவேன்?
5. மனது வாக்கு வினைகளில் எல்லாம் – யேசுநாதா ஸ்வாமி
மாசுளோனாய்க் கூசினேன் ஐயா.
6. என்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ – யேசுநாதா ஸ்வாமி
என்செய்வேன்? மறு தஞ்சம் இல்லையே.
7. அலகையோடெனை உலகம் ஏய்க்குமே – யேசுநாதா ஸ்வாமி
ஆதரவில்லை பாதுகா ஐயா.
8. மன்னுயிர்க் கெனத் தன்னுயிர் விட்ட – யேசுநாதா ஸ்வாமி
வந்தெனது நிர்ப்பந்தம் பார் ஐயா.
Paaviyaam Ennai Meavippar Lyrics in English
1.Paaviyaam Ennai Meavippar Aiyya -Yesu Naatha Swami
Patchamaaga En Paavantheer Aiyya
2.Devathorogi Paavi Naan Antro -Yesu Naatha Swami
Seer patham Thunaiyintri Verundo
3.Theevinaiyuru Saavu Meavittrae -Yesu Naatha Swami
Siththam Vaiththiratchithaal Yealaiyae
4.Sanjala Migunthanjal Aayinean -Yesu Naatha Swami
Thangum Unai Veedengae Yeaguvean
5.Manathu Vaakku Vinaikalil Ellam -Yesu Naatha Swami
Maasulonaai Koosinean Aiyaa
6.Enthan Neethi Oor Kanthai Allavo -Yesu Naatha Swami
En Seivean Maru Thanjam Illaiyae
7.Alagaiyodeanai Ulagam Yeaikkumae -Yesu Naatha Swami
Aatharavilla Paathu Aiyaa
8.Mannuyir kena Thannuir Vitta -Yesu Naatha Swami
Vanthenathu Nirpantham Paar Aiyaa