இலவசமாய் நீர் பெற்றுக் கொண்டீரே – Elavasamaai Neer Pettru Kondeerae

Deal Score0
Deal Score0

இலவசமாய் நீர் பெற்றுக் கொண்டீரே – Elavasamaai Neer Pettru Kondeerae

கண்ணிகள்

1.இலவசமாய் நீர் பெற்றுக் கொண்டீரே,
இலவசமாய் நீர் கொடுத்திடும்;
ஆதிபரனிட்ட கட்டளையாமே,
நீதியாம் அதைக் கைக்கொண்டிடும்.

2. நல்மனதுடனே ஈவதே பாக்யம்,
நல்ல பரன் அதை மெச்சிக்கொள்வார்;
இங்கிதமா யிகபர சலாக்யம்
“துங்கனாங் கிறிஸ்து தருவார்.

3. எத்தனை தேசத்தில், எத்தனை பேர்கள்
கர்த்தரின் செய்தி வேண்டி நிற்கிறார்?
புத்தியாய்த் தசம பாகங் கொடுங்கள்,
பக்தர் நற்செய்தி அறிவிப்பார்.

4. வஞ்சன் அனனியா மாது சப்ராளும்
வஞ்சித்ததின் பேற்றைப் பெற்றனரே;
உண்மையாய்த் தேவப் பங்கைக் கொடுத்திடும்,
திண்ணந் திண்ணம் நீர் பிழைப்பீரே.

5. இரக்கமுள்ளவர் பாக்கியவாளர்;
இரக்கத்தை யவர் பெற்றிடுவார்;
ஏழையோர்க் கிரங்கி யீயுந் தயாளர்,
ஏழைகள் பிதாவினால் வாழ்வார்.

Elavasamaai Neer Pettru Kondeerae song lyrics in English

1.Elavasamaai Neer Pettru Kondeerae
Ilavasamaai Neer Koduthidum
Aathiparanitta Kattalaiyamae
Neethiyaam Athai Kaikondidum

2.Nal manathudanae Eevathae Bakyam
Nalla Paran Athai Metchikolvaar
Ingithamaayikabara Salakyam
Thunkanaang Kiristhu Tharuvaar

3.Eththanai Deasaththil Eththanai Peargal
Kartharin Seithi Veandi Nirkiraar
Puththiyaai Thasama Paagam Kodungal
Bakthar Narseithi Arivippaar

4.Vanjan Ananiya Maathu Sapraalum
Vanjithathin Peattrai Pettranarae
Unmaiyaai Deva Pangai Koduththidum
Thinnam Thinnam Neer Pilaippeerae

5.Erakkamullvar Baakkiyavalar
Erakkaththai Yavar Pettriduvaar
Yealaiyorkku Erangi Eeyunthayaalar
Yealaigal Pithavinaal Vaalvaar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo