நல்வழி மெய் ஜீவன் – Nal vazhi Mei Jeevan 

Deal Score+1
Deal Score+1

நல்வழி மெய் ஜீவன் – Nal vazhi Mei Jeevan

பல்லவி

நல்வழி மெய் ஜீவன் எனும் நாம தேயனே – உனை
நம்பினேன் ஏழைக்கிரங்கி ஆள் என் நாயனே

அனுபல்லவி

செல்வழி விலகு தீயர் ஜீவனில் சேர – நர
ஜென்மமாம் மரித்துயிர்த்தாரே வினைதீர
திருமறை வேதா அருள் நிறை போதா
கருணை மெய்த் தாதா உரிமையுள்ளெம் யேசுநாதா! – நல்

சரணங்கள்

1.சத்தியத்தையே போதிக்கும் சத்தியம் நீயே – அந்த
சத்தியத்தில் நான் நடக்கச் சக்தி ஈவாயே
சுத்த மறையாம் சுவிசேஷத்தை ஈந்தாயே – அதின்
சுத்தாங்க மெய்ம்மை உணர்த்து வித்தருள்வாயே
தொழுதகம் நேர்ந்தேன் அழுதகம் ஓர்ந்தேன்
எளியனுள் சோர்ந்தேன் முழுதுமே சார்ந்தேன் உனதடி – நல்

2.செத்த பிரேதம்போல் செயல் அற்றவன் நானே – நல்ல
ஜீவனைக் கொடுக்கும் நித்ய ஜீவன் நீ தானே
முத்தி நெறி காட்டும் மார்க்கம் சுத்த நல் தேனே – அதின்
மூலம் நான் உயிர்க்க உனதாவி ஈ கோனே
முடவியல் மாற நடையது தேற
அடமது மாற திடமனதாய்க் கரையேற – நல்

Nal vazhi Mei Jeevan song lyrics in English

Nal vazhi Mei Jeevan Enum Naama Deayanae Unai
Nambinean Yealaikirangi Aal En Naayanae

Selvazhi Vilagu Theeyar Jeevanil Seara Nara
Jenmamaam Mariththuyirththaarae Vinaitheera
Thirumarai Vedha Arul Nirai Potha
Karunai Mei Thatha Urimaiyullaam Yesu Naatha

1.Saththiyaththaiyae Pothikkum Saththiyam Neeyae – Antha
Saththiyaththl Naan Nadakka Sakthi Eevaayae
Suththa Maraiyaam Suvisheashaththai Eenthayae – Athin
Suththanga Meimmai Unarnthu Viththarulvaayae
Tholuthagam Nearnthean Aluthagam Oornthean
Eliyanul Searnthean Muluthumae Saarnthean Unathadi

2.Seththa Piratham Poal Seyal Attravan Nanae Nalla
Jeevani kodukkum Nithya Jeevan Nee thanae
Muththi Neari Kaattum Maarkkam Suththa Nal Theanae Athin
Moolam Naan Uyirkka Unathaavi Eekonae
Mudaviyal Maara Nadaiyathu Theara
Adamathu Maara Thidamathaai Karaiyeara

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo