Kalangum En Desam – கலங்கும் என் தேசம்

Deal Score+1
Deal Score+1

Kalangum En Desam – கலங்கும் என் தேசம்

கலங்கும் என் தேசம்
மீட்கப்பட வேண்டும்
கொள்ளை கொண்டு
போகும் நோய்கள்
அழிந்திட வேண்டும்-2

அழகான தேசமே
அழகான தேசமே
ஆண்டவர் கையில் நீ
விழுந்திட வேண்டும்
ஓவ்வொரு உயிரும்
விலையேறப்பெற்றதே
ஒவ்வொரு ஜீவனும்
ஆண்டவர் படைப்பே

தேசமே என் தேசமே
நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம்
மருந்தாக வேண்டுமே-2

அலங்கோல வாழ்க்கை எல்லாம்
அழகாக வேண்டுமே
கண்ணீரின் பள்ளத்தாக்கும்
களிப்பாக வேண்டுமே
சாத்தானே நீ விதைப்பதெல்லாம்
ஒரு போதும் விளையாதே
இயேசப்பாவின் இரத்தம் ஒன்றே
உன்னை அழிக்கும்

விசுவாச ஜெபங்கள் எல்லாம்
ஜெயமாக மாறுமே
எல்லைகள் எல்லாம்
செழிப்பாக மாறுமே-2

என் தேசமே என் தேசமே
நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம்
மருந்தாக வேண்டுமே-2

மரணத்தின் ஓலங்கள்
மனதை உடைக்குதே
எரிகின்ற சரீரங்கள்
உணர்வை பிளக்குதே
ஏன் என்ற கேள்விகள்
எங்கேயும் தொனிக்குதே
இறைவா என் இயேசுவே
இறங்கிடுமே…

விசுவாச ஜெபங்கள் எல்லாம்
ஜெயமாக மாறுமே
எல்லைகள் எல்லாம்
செழிப்பாக மாறுமே-2

என் தேசமே என் தேசமே
நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம்
மருந்தாக வேண்டுமே-2

DHESAME SUGAMAAGA VENDUMAE | DANIEL JAWAHAR | PREVAILING PRAYER SONG

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo