முத்திரை மோதிரமே உன்னை – Muththirai Mothiramae Unnai
முத்திரை மோதிரமே உன்னை – Muththirai Mothiramae Unnai
முத்திரை மோதிரமே
உன்னைப் பத்திரமாக வைத்தேன் !
என் ராஜ வஸ்திரமே உனக்கு உடுத்தி மகிழ்ந்தேன் -என்
பாலும் தேனும் உனக்குத் தான்
கானான் தேசம் உனக்குத் தான் -2
உன்னைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்
உன்னை அடிப்பவன் என் கண்மணியைத் தொடுகிறான் -2
சீயோன் குமாரனே ! எழும்பி பிரகாசி !
தேவப் பிள்ளையே ! துதித்துப் பாடிடு
அக்கினி மதிலாக உனக்கிருப்பேன்
மகிமை மேகமாக உன்னை மூடுவேன் ! -2
பகலிலும் இரவிலும் கூட வருவேன்
பரம எருசலேம் உனக்குத் தருவேன் !