நேசரின் அன்பு நெருக்கிடும் – Neasarin Anbu Nerukkidum
நேசரின் அன்பு நெருக்கிடும் – Neasarin Anbu Nerukkidum
நேசரின் அன்பு நெருக்கிடும் போது
உலக மேன்மை உதறிவிட்டேன்
இயேசுவின் பின்னே ஓடி வந்தேன்
உரிமையோடென்னை நடத்துகிறீர்
நடத்துவீரே என்னை உரிமையோடு
நடத்துவீரே என்னை தரம் பிரித்து
1. ஆவியின் கனிகளால் நிறைந்திடுவேன்
ஜீவ கனிகளை கொடுத்திடுவேன்
திராட்சைக் கொடியாக
நான் உம்மில் படர்ந்திடுவேன் – நடத்துவீரே
2. கிருபை வரங்களால் நிரம்பிடுவேன்
ஜெப வீரனாய் எழும்பிடுவேன்
களிமண்ணாய் அவர் கரத்தில்
என்னை தினமும் வனைந்திடுவார் – நடத்துவீரே
3. பாவமான எல்லாம் விட்டுவிட்டேன்
நஷ்டமும் குப்பையும் ஆயினுமே
நல்லதோர் போராட்டத்தை
நான் வெற்றியுடன் முடித்திடுவேன் – நடத்துவீரே