அந்த சிலுவையே – Antha Siluvayae
அந்த சிலுவையே – Antha Siluvayae
நான் போகும் வழிதனை அறிந்தவர் நீர்
கால்கள் இடறாமல் காப்பவர் நீர்
எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே
சிலுவை அன்பினால் செய்து முடித்தீர்
அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை
எனக்கு எதிரான கையெழுத்தை
சிலுவை மரத்தில் நீர் ஆணியடித்தீர்
நான் நன்றாய் வாழ என் தலை உயர
உம்மையே எனக்காய் தந்தீரையா
அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை
எந்தனின் பாதங்கள் தவறிடும் நேரம்
உந்தனின் கரம் அது மீட்டதையா
என்னையும் நம்பி தந்த கிருபையினால்
உந்தனின் சித்தமதை செய்து முடிப்பேன்
அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை