ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ – Aasthikalelleam eedagumo song lyrics

Deal Score+6
Deal Score+6

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ – Aasthikalelleam eedagumo song lyrics

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ
என் அப்பா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ
உலக நேசங்கள் ஈடாகுமோ l
என் ராஜா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ-2

1 அன்பின் அக்கினி பற்றியெரியுதே
உள்ளமெல்லாமே (உம்மை) நாடித் தேடுதே-2
தண்ணீர்கள் தணிப்பதிலையே
நேசரே உந்தன் அன்பினை -2- ஆஸ்திகளெல்லாம்

2.திராட்சை ரசத்திலும் உம் நேசம் பெரியது
உந்தன் நாமமோ இனிமையானது-2
ருசித்துவிட்டேன் உந்தன் அன்பினை
அறிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை-2 ஐயா-ஆஸ்திகளெல்லாம்

3 தாயும் நீரே தந்தையும் நீரே
சொந்தமும் நீரே எனதெல்லாம் நீரே-2
ஆத்ம நேசர் எந்தன் நேசரே
ஆயுள் எல்லாம் போதும் நீரே-2- ஆஸ்திகளெல்லாம்

4.வெண்மையானவர் நீர் ரூபமுள்ளவர்
இன்பமானவர் நீர் மதுரமானவர்-2
உன்னதப் பாடல் உம்மைக்குத்தானய்யா
அன்பரே எந்தன் இயேசய்யா-2-ஆஸ்திகளெல்லாம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo