விளையும் பயிர் முளையிலே – Vilaiyum Payir Muzhaiyilae
விளையும் பயிர் முளையிலே – Vilaiyum Payir Muzhaiyilae
விளையும் பயிர் முளையிலே தெரியுது பார் நிலத்திலே
அள்ளி தூவும் விதைகளை கண்ணீரோடு விதைக்கின்றான்
விதையும் விதைக்கின்றான் விளையவும் செய்கின்றான்
விளைந்தவுடன் அரிக்கட்டுகளை சுமந்து மகிழ்கின்றான்
வழி அருகில் விழுந்த விதை முளைக்குமா
எத்தனை தான் வசனம் கேட்டாலும்
தம் முடிவு தான் மேன்மை என்பவனும்
வழி அருகில் விழுந்த விதை முளைக்குமா
பறவைகளால் கொத்தப்படும் கால்களால் மிதிக்கப்படும்
விதையும் இல்லையே அதனால் விளைச்சல் இல்லையே
கற்பாறையில் விழுந்த விதை முளைக்குமா
கொஞ்சம் தான் கவனம் செலுத்துவான் கேட்ட
வசனத்தை உடனே மறந்திடுவான்
கற்பாதையில் விழுந்த விதை முளைக்குமா
கற்பாறை மேல் நின்று விடும் காய்ந்தநிலையை அடைந்து விடும்
விதையும் இல்லையே அதனால் விளைச்சல் இல்லையே
முள்ளுகளுக்குள் விழுந்த விதை முளைக்குமா கவலையால்
சிந்தை கெட்டவனும் பணம் மயக்கத்தால் கறை பட்டவனும்
முள்ளுகளுக்குள் விழுந்த விதை முளைக்குமா
முள்களாலே வளர்ந்து விடும் முள்களாலே நெருக்கப்படும்
முள்களுக்குள் வளர்ந்து விடும் முள்களால் நெருக்கப்படும்
விளைச்சல் இல்லையே அதனால் பலனும் இல்லையே
விளையும் பயிர் முளையிலே தெரியுது பார் நிலத்திலே
நல்ல நிலத்தில் விழுந்த விதை முளைக்குமே
சத்தியத்தை கவனமாய் கேட்பவன்
கேட்ட சத்தியத்தில் உறுதியாய் நிற்பவன்
நல்ல நிலத்தில் விழுந்த விதை முளைக்குமே
தண்ணீர் நன்றாய் பாய்ச்சப்படும் களைகள் எல்லாம் எடுக்கப்படும்
விளைச்சல் அதிகமே அதனால் மகிழ்ச்சி பெருகுமே
Vilaiyum Payir Muzhaiyilae song lyrics in english
Vilaiyum Payir Muzhaiyilae