தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil

Deal Score+1
Deal Score+1

தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil

பல்லவி

தனிமையின் நேரங்களில் துணையானீரே
இருளின் இடுக்கங்களில் வெளிச்சமானீரே
வெயிலின் தகிப்புகளில் நிழலானீரே
கடலின் ஓலங்களில் துடுப்பானீரே – 2

                           அனுபல்லவி

படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பா
புயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2
தனிமையின் நேரங்களில் துணையானீரே…

                                 சரணம்

கெர்ச்சிக்கும் சிங்கம் போல சாத்தான் வந்தாலும்
பொல்லாத மனுஷர்கள் எதிர்த்து நின்றாலும் – 2
என் பக்கமாய் இருந்தீரையா
யுத்தங்களை ஓயப்பண்ணினீர் – 2
படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பா
புயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2
தனிமையின் நேரங்களில் துணையானீரே…

ஏராள நன்மைகள் எனக்கு செய்தீரே
கசப்பான என் வாழ்வை மதுரமாக்கினீர் – 2
தடைகளெல்லாம் நீக்கினீரையா
கோணல்களை செவ்வை பண்ணினீர் – 2
படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பா
புயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2
தனிமையின் நேரங்களில் துணையானீரே…

வெண்கலக் கதவுகளை எனக்காய் உடைத்தீர்
இருப்புத் தாழ்ப்பாள்களை எனக்காய் முறித்தீர் – 2
பெயர் சொல்லி அழைத்தீரைய்யா
முடிவுவரை என்னோடிருப்பீர் – 2
படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பா
புயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2
தனிமையின் நேரங்களில் துணையானீரே…

பாசத்தின் பிணைப்பால் என்னை தேடி வந்தீரே
நேசத்தின் கரம் கொண்டு அணைத்து கொண்டீரே – 2
உம்மை விட்டு எங்கே ஓடுவேன்?
நீரில்லாமல் நானே இல்லையே – 2
படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பா
புயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2

தனிமையின் நேரங்களில் துணையானீரே
இருளின் இடுக்கங்களில் வெளிச்சமானீரே
வெயிலின் தகிப்புகளில் நிழலானீரே
கடலின் ஓலங்களில் துடுப்பானீரே – 2
படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பா
புயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2
தனிமையின் நேரங்களில் துணையானீரே

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo