Vinnum Mannum Sernthidavae Christmas song lyrics – விண்ணும் மண்ணும் சேர்ந்திடவே
Vinnum Mannum Sernthidavae Christmas song lyrics – விண்ணும் மண்ணும் சேர்ந்திடவே
ஆதியும் அந்தமும் கடந்த ஒளியொன்று
பூமிக்கு வந்ததே மனித உருவில்…
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas – 2
பல்லவி
விண்ணும் மண்ணும் சேர்ந்திடவே
புதிய ஏதேன் வந்ததம்மா
ஆதியும் அந்தமும் இணைத்திடவே
புதிய சீனாய் வந்ததய்யா
பாவம் புண்ணியமா மாறிடவே
புதிய ஆதாம் வந்தாரம்மா
காலம் கனிந்த வேளையிலே
கடவுளின் கருணை தோன்றியதே
குழு:
வானதூதர் வாழ்த்துப்பாட
வான்வெளியே அதிருது
மண்ணவரும் சேர்ந்து ஆட
யுகமொன்று பிறந்தது
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas – 2
உன்னதத்தில் தேவனுக்கு
மாட்சி என்றும் உண்டாகுக
உலகினிலே நல்மனதோர்க்கு
அமைதி உண்டாகுக
சரணம்: 1
மாடடையும் கொட்டிலிலே
ஆடுகளின் மத்தியில
தேடிப்போன ஞானியர்க்கு
காத்திருந்த நல் விருந்து
அன்று கொடுத்த வாக்குறுதிய
நிறைவேற்றும் நம்ம கடவுள்
கானான் தேசம் கூட்டிப்போன
வாக்கு மாறா நம்ம கடவுள்
குழு:
ஏதேன் தோட்டம் போலாம் வாங்க
புதிய ஆதாம் பாக்க வாங்க
பாவம் இல்லா வாழ்க்க ஒன்னு
வாழப்போறோம் எல்லாம் வாங்க
இது வசந்த காலம் கனிந்த காலம்
இது அருளின் நேரம் – புது
உறவின் நேரம்
சரணம்: 2
பாமரனின் வாழ்க்கையில
பரம்பொருளே கிடச்சதம்மா
துன்பமில்லா வாழ்க்க ஒன்னு
தூரத்தில தெரியுதம்மா
விண்ணரசு நம் கண்கள் முன்னே
முன்னேறுவோம் அவர் பாதையில
படைத்தவரின் சாயல் கொண்ட
மனிதர் எல்லாம் ஒன்று கூட