Kondadi Magilvom Christmas song lyrics – கொண்டாடி மகிழ்வோம்
Kondadi Magilvom Christmas song lyrics – கொண்டாடி மகிழ்வோம்
தாவீதின் ஊரிலே மாட்டுத் தொழுவிலே தேவ மைந்தன் பிறந்தாரே
-நல்ல செய்தியே இது நல்ல செய்தியே
பரிசுத்த ஆவியால் கன்னி வயிற்றிலே பாலன் இயேசு பிறந்தாரே
-நல்ல செய்தியே இது நல்ல செய்தியே
இம்மானுவேலராய் நம்மோடு இருப்பார்
உலகத்தின் இறுதிவரை
இன்னல்கள் யாவையும் நீக்கி நம்மை என்றும்
கண்மணி போல் காப்பவரே
பாடி துதிப்போமே
அவரை கொண்டாடி மகிழ்வோம் -2
- விந்தையாக பூவில்
புல்லனையின் மீதில்
கன்னிமரி பாலன்
பிறந்தாரே…
தூதர் கூட்டம் பாட
சாஸ்திரிகளும் வந்து
பரிசுகளை தந்து
வணங்கினாரே….
அதிசய நாமம்
ஆலோசனை கர்த்தர்
வல்லமையின் தேவன்
நித்திய பிதாவே
சமாதான பிரபுவே
அன்பின் உருவானவரே
பாடி துதிப்போமே அவரை
கொண்டாடி மகிழ்வோம் -2
- வாக்குத்தத்தம் யாவும்
நிறைவேற்ற வந்தார்
சர்வ வல்ல தேவன்
நமக்காக
அதிசயமாய் வந்து
அற்புதங்கள் செய்து
சுகம் தரும் தெய்வம்
இயேசு தானே
நம் பாவம் போக்கி
பரிசுத்தமாக்கி
தம்மைப் போல் மாற்றிடவே
நித்திய காலமாய்
அவரோடு என்றும்
பரலோகில் வாழ்ந்திடவே
பாடி துதிப்போமே அவரை
கொண்டாடி மகிழ்வோம் – 4
Kondadi Magilvom Tamil Christmas song lyrics