Vinnin Devan Mannai Theadi christmas song lyrics – விண்ணின் தேவன் மண்ணைத் தேடி
Vinnin Devan Mannai Theadi christmas song lyrics – விண்ணின் தேவன் மண்ணைத் தேடி
விண்ணின் தேவன் மண்ணைத் தேடி வந்த நேரம்
எந்தன் உள்ளம் கொள்ளை போகுதே
வாழ்வின் விடியல் வந்துதித்ததே
காரிருள் நீங்கி ஒளி பிறந்ததே
ஏழை நம்மை செல்வராக்க
வாழ்வின் வேந்தன் ஏழையாகினார்
1.முகவரி இழந்த எளியவரை
விளிம்பினில் வாழ்ந்திடும் வறியவரை
ஆர்வமாய் தேடிடும் ஆயனிவர்
என்பதை உலகம் உணர்ந்திடவே
தேவ தூதன் தேடி வந்தார்
எளிய இடையர் கிடையை நாடியே
2.வலிமையும் ஆற்றலும் நிறைந்த தெய்வம்
மானுட குழந்தையாய் பிறந்துள்ளார்
வறுமையை ஏழ்மையை வாழ்ந்துணர
மாடடை தொழுவத்தில் வந்துதித்தார்
வல்ல தேவன் தன்னை தாழ்த்தி
மரிவளனின் தயவை நாடினார்