பரலோக தந்தாய் நின்னாமம் – Paraloga Thanthaai Ninnamam

Deal Score0
Deal Score0

பரலோக தந்தாய் நின்னாமம் – Paraloga Thanthaai Ninnamam

1. பரலோக தந்தாய்! நின்னாமம்-அதி
பரிசுத்தமுறவே, நின் ராஜ்யம்
வரவே, நினது திருவுளச் சித்தமே
பரமதில் போலிங்கும் துலங்கிடவே.

2. அன்றாடம் உணவளித்திடுவாய்;-யாம்
அயலார் செய்பிழை பொறுப்பதுபோல்,
இன்றே எங்கள் பவங்களைப் பொறுத்தே
நன்றருள்வாய் நரபரிபாலா!

3. சோதனையறக் கண்பார்த்திடுவாய்;-வரு
தீதனைத்திலும் எமைக் காத்திடுவாய்;
நீதா, ராஜ்யம் வல்லப மகிமை
நினைக்கே யுரிய எக்காலமுமே!

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo