பின்செல்வேன் என் மீட்பரே – Pinselvean en meetparae
பின்செல்வேன் என் மீட்பரே – Pinselvean en meetparae
பல்லவி
பின்செல்வேன், என் மீட்பரே;-நான் உன்னைப்
பின்செல்வேன், என் மீட்பரே
அனுபல்லவி
நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர,
நாதா, ஜீவன் விட்டாய் வன் குருசிலதால், – பின்
சரணங்கள்
1. என் சிலுவை எடுத்தேன்,-எல்லாம் விட்டு
என்றும் நின்னையே அடுத்தேன்;
நின் திருப் பாதத் தடங்களை நோக்கி நான்
நித்தமும் வாழ்வேன் உன் சித்தம் என்றும் செய்து, – பின்
2. சிங்கம் போல கெர்ச்சித்தே-என்றன் நெரே
சீறி மிக வெதிர்த்தே;
கங்குல் பகலும் தீ அம்பு என்மேல் எய்யும்
கடியின் மேல் ஜெயம் பெற்று, அடியேன் நின்னருள் பெற்று, – பின்
3. நெருக்கம் செய்தால் மனுஷர்-அதென்னையுன்
நெஞ்சண்டை ஒட்டுவதால்;
பாரிடத்தில் பல சோதனை வதைத்தாலும்,
பார்த்திபனே; உன்னை ஒருபோதுமே விடேன், – பின்
4. காசினி யோர்கள் என்னைப்-பகைத்தாலும்
காதலன் ஏசு உன்னைப்
பாசமதாகவே பணிந்து தொழுவேனே;
பாக்கிய நகரில் பின் உன்னோடு வாழ்வேனே. – பின்