நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு – Nallavar nallavar yesu nallavar

Deal Score+3
Deal Score+3

நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு – Nallavar nallavar yesu nallavar

நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்
நாங்கள் இங்கே பாடும் எங்கள் இயேசு நல்லவர்
உண்மை தெய்வம் இவர் உலகை இரட்சித்தவர்
நன்மை செய்தே இவர் உலகை நாடெங்கும் சுற்றியவர்
நானிலத்தோர்க்கு நன்மைகள் செய்த நல்லவர் – இயேசு

1. அன்பாய் பிறரை நேசிப்பவர்க்கு இயேசு நல்லவர் (1)
ஆதரவில்லா அனாதைகட்கு இயேசு நல்லவர்
திக்கற்றோர்க்கும் விதவைகளுக்கும் இயேசு நல்லவர்
தீய வழிகளிலிருந்து திரும்பியவர்க்கு இயேசு நல்லவர் (2) – இயேசு நல்லவர் (4)

2. குருடர்களுக்கு பார்வை கொடுத்த இயேசு நல்லவர் (2)
குஷ்டரோகிகளையும் சொஸ்தமாக்கிடும் இயேசு நல்லவர் (2)
முடவர்களையும் நடந்திட செய்த இயேசு நல்லவர் (2)
முட்களின் நடுவே லீலியின் ரோஜா இயேசு நல்லவர் (2) – இயேசு நல்லவர் (4)

3. பாவத்தை போக்கி பயமதை நீக்கிய இயேசு நல்லவர் (2)
பரலோக சந்தோஷம் பக்தருக்களித்த இயேசு நல்லவர் (2)
பரிமள தைலமாய் வாசனை தந்த என் இயேசு நல்லவர் (2)
பாரினில் இவர்போல் தெய்வமும் இல்லை
என் இயேசு நல்லவர் (2) – இயேசு நல்லவர் (4)

4. இருளில் வாழும் ஜனங்களை மீட்ட இயேசு நல்லவர் (2)
ஈன லோகத்திற்காக சிலுவை சுமந்த இயேசு நல்லவர் (2)
மண்ணுயிர்க் காக்க தன்னுயிர் தந்த இயேசு நல்லவர் (2)
மூன்றாம் நாளில் மரித்துயிர்த்தெழுந்த இயேசு நல்லவர் (2) – இயேசு நல்லவர் (4)

நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்.
Go thy way, eat thy bread with joy, and drink thy wine with a merry heart; for God now accepteth thy works.
உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக.
Let thy garments be always white; and let thy head lack no ointment.
பிரசங்கி Ecclesiastes 9

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo