
கூடாதது ஒன்றுமில்லையே – koodathathu Ontrumillayae
கூடாதது ஒன்றுமில்லையே – koodathathu Ontrumillayae
கூடாதது ஒன்றுமில்லையே (4)
நம் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லையே
சரணங்கள்
1. ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே (2)
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே (2)
2. கடலின் மேல் நடந்தாரே
கடும் புயல் அதட்டினாரே
பாடையை தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே
3. நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரிய காரியம் செய்வாயே
4. பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே
தீராத நோய்களையும்
தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே
44 நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
[மத்தேயு 22:44]