Nallavare Umakku Nantriyaiya – நல்லவரே உமக்கு நன்றியய்யா
நல்லவரே உமக்கு நன்றியய்யா
வல்லவரே உமக்கு நன்றியய்யா
அணு -பல்லவி
நன்றி நன்றி நன்றி நன்றியென்று சொல்லுகிறேன்
நன்மைகளை நினைத்து நினைத்து துதிக்கிறேன்
சரணம் 1
உந்தன் கிருபையினால் உலகில் இன்று வாழ்கிறேன்
உத்தமமாய் என்றும் வாழ வேண்டுகின்றேன்
சரணம் 2
எந்தன் சொத்து சுகம் எல்லாம் நீர்தந்தது
எந்தன் சுற்றம் சூழல் எல்லாம் இனிமையானது
சரணம் 3
குற்றங்கள் குறைகளெல்லாம் தயவாய் மன்னித்தீர்
கோடி கோடி ஸ்தோத்திரங்கள் உமக்கு செலுத்துகிறேன்
சரணம் 4
ஆவியினால் நிரப்பி என்னை பாடவைத்தீர்
ஆவியினால் துதித்து குதித்து என்னை ஆடவைத்தீர்