உம்மைப்போல நல்ல தகப்பன் – Ummai Pola Nalla Thagapan song
உம்மைப்போல நல்ல தகப்பன் – Ummai Pola Nalla Thagapan song
உம்மைப்போல நல்ல தகப்பன் இல்லப்பா
உம்மைப்போல நல்ல தெய்வம் இல்லப்பா-2
என் நினைவுகளை அறிபவர் நீரே
என் துவக்கமும் நீர் முடிவும் நீரே
கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல
1.தகப்பனே உம்மை விட்டு தூரப்போனேன்
ஆஸ்திகளை முழுவதுமாய் அழித்துப்போட்டேன்-2
வாழ வழியில்லாமல் சாகிறேன்
பரத்துக்கும் உமக்கெதிராய் பாவம் செய்தேன்-2
தகப்பனே உம்மை நோக்கி வருகிறேன்-2
என் நினைவுகளை அறிபவர் நீரே
என் துவக்கமும் நீர் முடிவும் நீரே
கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல
2.தகப்பனே தூரத்தில் என்னை கண்டீரே
ஓடி வந்து முத்தம் எனக்கு செய்தீரே-2
உருக்கமும் இரக்கத்தாலே அணைத்தீரே
உயர்ந்த வஸ்திரத்தை தந்தீரே-2
உமது வீட்டில் என்னை சேர்த்தீரே-2
என் நினைவுகளை அறிபவர் நீரே
என் துவக்கமும் நீர் முடிவும் நீரே
கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல
3.இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே
மரணத்தின் வாயிலிருந்து பிடுங்கினீரே-2
பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பித்தீரே
இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே-2
நித்திய (உமது) வீட்டில் என்னை சேர்த்தீரே-2
என் நினைவுகளை அறிபவர் நீரே
என் துவக்கமும் நீர் முடிவும் நீரே
கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல