
NINAIKKA NINAIKKA NENJAM – நினைக்க நினைக்க நெஞ்சம் song lyrics
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்கிறதே உம்மை சுவைக்க சுவைக்க தஞ்சம் கிடைக்கிறதே எந்தன் உணவாய் என்னுள் உயிராய் வாழும் இயேசுவே ஏங்கும் இதயம் தாங்கும் சுகமாய் நாளும் வாருமே என்னில் நாளும் வாருமே
ஆன்ம உணவே அருமருந்தே அரவணைக்கும் இயேசுவே ஆத்ம பாரமே அகன்று போகுமே உந்தன் உணவை உண்ணும் போது உந்தன் உயிரே உணவாய் தந்து உலகின் ஒளியாய் தினமும் வாழ்ந்து வழி நடத்தும் இயேசுவே வாழ்வாய் அளிக்கும் இறைவனே
ஆற்றல் அளிக்கும் பொங்கும் ஊற்றாய் எம்மில் தங்கும் இயேசுவே தாகம் தணியுமே பாரம் தீருமே உந்தன் ரத்தம் பருகும்போது எந்தன் குறையை நிறைவாய் மாற்றி உந்தன் மறையை வாழ்வாய் ஏற்றி வழி நடத்தும் இயேசுவே வாழ்வை அளிக்கும் இறைவனே