
AANDAVARIN VAAKU EN PATHAI – ஆண்டவரின் வாக்கு song lyrics
ஆண்டவரின் வாக்கு என் பாதை விளக்கு
ஆண்டவரின் வாக்கு என் வாழ்வின் மீட்பு
உயிருள்ள வாக்கு ஆற்றல்மிகு வாக்கு
வலுவூட்டும் வாக்கு வாழ்வாகும் வாக்கு
தீயவழி எதிலும் நான் கால்வைப்பதில்லை
பொன்வெள்ளி எதிலும் என்மனம் போவதில்லை
பொய்வார்த்தை எதுவும் என் வாய் சொல்வதில்லை
உம் நியமங்களை விட்டு நெறிபிரள்வது இல்லை
ஏனெனில் உம்வார்த்தை வழிகாட்டும்
துன்பமும் கவலையும் தினந்தோறும் உண்டு
தீயவரின் கண்ணிகள் திசைதோறும் உண்டு
சதிசெய்து வீழ்த்துவோர் என்அருகில் உண்டு
வஞ்சகத்தின் நாவுகள் எனைசுற்றி உண்டு
ஆயினும் நீரே என் பாதுகாப்பு