Enthan Devan – எந்தன் தேவன் song lyrics
எந்தன் தேவன் எங்கே என்றேன்
உம்மை கண்டேன் இங்கே இன்றே
அன்பால் என்னை நிரப்பும் தேவன்
எந்தன் வாழ்வை நடத்தும் ஜீவன்
இதயம் முழுவதும் உம்மை தேடியே
அனுதினம் எங்கும் உம்மை பாடவே
மகிமை மகிமை என்றும் உமக்கே
மாட்சிமை எல்லாம் தேவா உமக்கே
எனது சகலமும் என்றும் உமக்கே
உமது பிரியம் நான் தேவா உமக்கே
ஜீவனும் உமக்கே அன்பர் நீர் எனக்கே
வந்திடும் வந்து என்னை சேர்த்திடும் பரமே
எந்தன் தேவன் எங்கே என்றேன்
உம்மை கண்டேன் இங்கே இன்றே
தந்தையே எந்தன் இரட்சகரே
உம்மை பாடி பாடி என்றும் துதிக்கின்றேன்
உம்மையே வந்து சேர்ந்திட
எந்தன் வாழ்வில் ஏங்கியே தவிக்கிறேன்
வந்திடும் தேவா இயேசு தேவா
என் இராஜ இராஜா தியாக இராஜா
அன்பின் ஸ்வரூபா தேவ கிருபா
இரங்கும் நாதா எந்தன் நாயகா
வந்திடும் வந்து என்னை சேர்த்திடும் பரனே
எந்தன் தேவன் எங்கே என்றேன்
உம்மை கண்டேன் இங்கே இன்றே
அன்பால் என்னை நிரப்பும் தேவன்
எந்தன் வாழ்வை நடத்தும் ஜீவன்
இதயம் முழுவதும் உம்மை தேடியே
அனுதினம் எங்கும் உம்மை பாடவே