
Valga Neasamullorae Lyrics – வாழ்க நேசமுள்ளோரே
Deal Score0
Shop Now: Bible, songs & etc
1. வாழ்க, நேசமுள்ளோரே!
இனம் இனம் யாருமே,
களிப்புடன் கூடுங்கள்,
வாழ்த்தல் சொல்லிப் பாடுங்கள்.
2. கர்த்தர் தாமே ஆதியில்
பாவம் இல்லாக் காலத்தில்
தந்தை தாயை நேசமாய்
சேர்த்திணைத்தார் ஏகமாய்.
3. நெஞ்சை நெஞ்சுடன் அன்பாய்
ஐக்யமாக்கி, தயவாய்
இல்லறத்தின் வாழ்விலே
பாதுகாரும் யேசுவே.