Mei Samaathanama Thur – மெய்ச் சமாதானமா துர்
1.மெய்ச் சமாதானமா துர் உலகில்?
ஆம், இயேசு ரத்தம் பாயும் நெஞ்சினில்
2.மெய்ச்சமாதானமா பல் தொல்லையில்?
ஆம், இயேசு சித்தத்தை நாம் செய்கையில்
3.மெய்ச்சமாதானமா சூழ் துக்கத்தில்?
ஆம், இயேசு சீர் அமர்ந்த நெஞ்சத்தில்
4.மெய்ச்சமாதானமா உற்றார் நீங்கில்?
ஆம், இயேசு கரம் நம் காக்கையில்
5. மெய்ச்சமாதானமா சிற்றறிவில்?
ஆம், இயேசு ராஜன் என்று அறிகில்.
6. மெய்ச்சமாதானமா சாநிழலில்?
ஆம், இயேசு சாவை வென்றிருக்கையில்,
7. பூலோகத் துன்பம் ஒழிந்த பின்னர்,
இயேசு மெய்ச்சமாதானம் அருள்வர்.