Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில்

Deal Score+1
Deal Score+1

1. கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்
யேசுவை இந் நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்

ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
நல் மீட்பர் கிருபாசனம்!
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்!

2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும் போது வருவார்
வாக்குப் போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார் – ஆ! இன்ப

3. சொற்பப் பேராய்க் கூடினும்
கேட்பதெல்லாம் தருவார்
வாக்குப்படி என்றைக்கும்
யேசு நம்மோடிருப்பார் – ஆ! இன்ப

4. வாக்கை நம்பி நிற்கிறோம்,
அருள் கண்ணால் பாருமேன்
காத்துக் கொண்டிருக்கிறோம்
வல்ல ஆவி வாருமேன் – ஆ! இன்ப

Koodi Meetpar Namathil
Avar Paatham Panivom
Yesuvai In Nearathil
Kandanantham Adaivom

Ah Inba Inba Aalayam
Nal Meetpar Kirubasanam
Kandadaivom Tharisanam
Inba Inba Aalayam

Erandu Moontru Pear Ontraai
Kenjum Pothu Varuvaar
Vakku pola Thayavaai
Aaseervaatham Tharuvaar

Sorpa pearaai Koodinum
Keatpa thellam Tharuvaar
Vakkupadi Entraikum
Yesu Nammodirupaar

Vaakkai Nambi Nirkirom
Arul Kannal Paarumean
Kaathu kondirukirom
Valla Aavi Vaarumean

 

Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo