Abhishega Naadha Anal Moottum Deva – அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவா
அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவா
ஆருயிர் அன்பரே
1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
ஆவியில் ஜெபித்திட அனலாய் வாருமே
2. ரகசியம் பேசிட கிருபை தாருமே
சத்திய ஆவியாய் என் மேல் வாருமே
3. தேசத்தை கலக்கிட தண்டனை தாருமே
திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே
4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே
பரிசுத்தமாகிட தினம் என் மேல் வாருமே
5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே
6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே