
Neer vendum Neer vendum Neerae Vendumae – நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே
நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே
உன் அன்பு ஒன்றே போதும் எனக்கு… நீரே போதுமே
அன்புக்காய் அலைந்தேன் அன்புக்காய் ஏங்கினேன்
அன்பில்லா உலகினிலே… என்னை கண்டீர் அரவணைத்திர்
உன் பிள்ளையாய் என்னை தெரிந்து கொண்டீர்
நன்றி நன்றி சொல்வேன் (உமக்கே) நன்றி நன்றி சொல்வேன்
உடைந்த பாத்திரம் நான் உபயோகமற்று இருந்தேன்
உன் சித்தத்திற்கு என்னை வனைந்து கொண்டீர்
கைவிடப்பட்ட சில நேரங்களில் …
உந்தன் கரம் எண்ணில் தாங்க செய்தீர்(செய்வீர்)
பாவ சேற்றில் வாழ்ந்த என்னையே
மீட்டு உந்தன் வாசம் தந்தீர்
நம்பின மனிதர்கள் நட்டாற்றில் விட்டாலும்
அழைத்த தேவன் நீர் நடத்தி வந்தீர்(செல்வீர்)
ஊழியப் பாதையில் சோர்ந்து நான் நிற்கையில்
என் கிருபை உனக்குப் போதும் என்றீர்
பிரச்சனை எனக்கெதிராய் மலைபோல நின்றாலும்
உமக்காய் என்னை வாழ செய்தீர் (செய்வீர்)