உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா – Ullathin Magilchi Neerthanaiya
உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா
இல்லத்தில் எல்லாமே நீர்தானையா -என்
என் தேவையெல்லாம் நீர்தானே
ஜீவனுள்ள நாளெல்லாம்
1.வழிகள் அனைத்தையும்
உம்மிடம் ஒப்படைத்தேன்
என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமே செய்து முடிப்பீர்
2. பட்டப்பகல்போல, (என்)
நீதியை விளங்கச் செய்வீர்
நோக்கி அமர்ந்திருப்பேன்,
உமக்காய்க் காத்திருப்பேன்
3.கோபங்கள், ஏரிச்சல்கள்
அகற்றி ஏறிந்து விட்டேன்
நம்பியுள்ளேன் உம்மையே,
நன்மைகள் செய்திடுவேன்
4.பாதத்தில் வைத்து விட்டேன்,
பாரங்கள், கவலைகள் – உம்
தள்ளாட விடமாட்டீர்
தாங்கியே நடத்திச் செல்வீர்