கிதியோன் நீ – Githiyon Nee Devanal
கிதியோன் நீ கிதியோன் நீ
தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ
1. உணவுக்கு போராடும் தேசத்திலே
உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே
விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை
விரட்டணுமே இயேசு நாமம் சொல்லி
வாலிபனே வாலிபனே
ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா
2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே
விக்கிரக ஆவிகளை விரட்டணுமே
கர்த்தர் மனம் இறங்க கதறணுமே
நாடு நலம்பெற ஜெபிக்கணுமே
3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு
பயமின்றி திருவசனம் அறிக்கையிடு
மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொட
புளியாத அப்பாமாக மாறிவிடு
4. இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுபோ
எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்
படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்
பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்