
Por Seivom – போர் செய்வோம்
1. போர் செய்வோம்! போர் செய்வோம்! தேவ ஊழியரே!
செல்லுவோம் இயேசு நாதர் நற் பாதையிலே
மிக்க ஞானத்தினால் வழி நடத்துவார்!
வல்ல ஆவியின் பெலனை அருளுவார்!
பல்லவி
போர் செய்வோம் போர் செய்வோம்
போர் செய்வோம் போர் செய்வோம்
இரத்தம் தீயுடன் நாம் யுத்தஞ் செய்வோம்
நம் மீட்பர் வருமளவும்!
2. போர் செய்வோம்! போர் செய்வோம்! சுவிசேஷகரே
காட்டுவோம் தெளிவாய் ஜீவ மார்க்கத்தையே!
பாவ நாச விசேஷத்தைப் பகரவும்
பிராயச்சித்த நற்செய்தி விஸ்தரிக்கவும் – போர்
3. போர் செய்வோம்! போர் செய்வோம்! விசுவாசிகளே
கூறுவோம் கிறிஸ்துவின் ராஜரீகத்தையே
அந்தகாரத்தின் கிரியைகள் நொறுக்குவார்
பரலோக பேரின்பத்தை நாட்டுவிப்பார்! – போர்
4. போர் செய்வோம்! போர் செய்வோம்! தேவதாசர்களாய்
சேருவோம் மோட்ச லோகம் மகத்துவமாய்
அந்த லோகத்தின் ஜோதியில் ஆனந்திப்போம்,
சுக வாழ்வும் சந்தோஷமும் கண்டடைவோம்! – போர்