
Aaviyil Jebam Seiya – ஆவியில் ஜெபம் செய்ய
பல்லவி
ஆவியில் ஜெபம் செய்யப் பெலன் தாரும் சுவாமி!
அடைக்கலம் எனக்கு வேறில்லை தேவாவி!
சரணங்கள்
1. தேவாவி அருள்மாரி எம்மேலனுப்ப
தேவா ஜெயித்திட பெலன் வேண்டும் சுவாமி! – ஆவி
2. முழு உள்ளம் கரைத்து என் இதயத்திலிருந்து
சுளுவாக வசனங்கள் சுரந்திடச் செய்யும் – ஆவி
3. வஞ்சக வசனத்தால் இருளடையாமல்
நெஞ்சம் உம்மில் சார்ந்து அருள் பெறச் செய்யும் – ஆவி
4. பெலனற்ற ஏழைக்குப் பெலன் தாரும் சுவாமி,
நலமாக நாவை நீர் மாற்றிடும் சுவாமி – ஆவி
5. ஜெபம் செய்ய வாயை நீர் தொட்டிடும் சுவாமி,
ஜெயம் பெற வகை விதம் கற்பியும் சுவாமி – ஆவி
6. இயேசுவின் இரத்தத்தால் இதயத்தைக் கழுவி
நேசரி னாவியா லொருமிக்கச் செய்யும் – ஆவி