Aananthamae Ithu Aananthamae – ஆனந்தமே இது ஆனந்தமே
சரணங்கள்
1. ஆனந்தமே இது ஆனந்தமே – தோழர்
ஆனந்த நாட்டிற்கு ஏகினாரே;
நம்மைப் பிரிந்தது நஷ்டமென்றாயினும்
அன்னவர் லாபம் அளவற்றதே
2. லோகப் பிரயாசம் நீங்கினது – அவர்
ஆத்ம கிலேசங்கள் மாறினது,
மேலோக ஏதேனில் வாழ்ந்திடச் சென்றிட்ட
ஆவியை நாமும் பின் சென்றிடுவோம்
3. சென்றடைந்தார் அவர் ஆக்கியோன் சந்நிதி,
ஆகாய வாகனம் ஏறிச் சென்றார்;
தோழரை விட்டுப் பிரிந்து சென்றார் – அவர்
காற்றும் புயலுங் கடந்து சென்றார்
4. இளைப்பாறுதல் தேசம் தீவிரமாய்ச் சேர்ந்தார்,
தொல்லைகள் சூழ்ந்த இந்நாட்டை விட்டு;
நம்பிக்கையும் சமாதானமும் அங்குண்டு,
துக்கமும் பாவமும் அங்கேயில்லை
5. இரட்சகரோடிங்கு சஞ்சரித்தவர்கள்,
எல்லாவரும் அங்கு கூடிடுவர்;
மாறி மாறி அவர் வாழ்த்துதல் கூறிப்பின்
ஆர்ப்பரிப்போ டவர் ஆனந்திப்பார்
6. கஷ்டத்தின் மேலும் மரணத்தின் மேலும் – பேர்
வெற்றி பெற்ற பெருங் கூட்டரவர்;
லோக ஆசை முற்றும் தீர்ந்து அவர் அங்கு
நித்திய காலம் சுகித் திருப்பார்