வா வா இயேசு பாதம் தருவாராசீர்வாதம்

Deal Score0
Deal Score0

வா-வா இயேசு பாதம் தருவாராசீர்வாதம்
வருவாய் ஓ இந்நேரம் உனக்கேன் தாமதம்
வாராய் தீவிரமாய் வாசலண்டை
நிற்கும் நேசர் பாராய் – வா-வா

சரணங்கள்

1. ஓ காடு மேடாகச் சாடி ஓடும் ஆடே – உன்
கோனார் நாடித்தேடி வாறார் உன் காலடி
நில்-நில் நீங்காமல் நில்-நாச பாதை
தனில் சென்றிடாமல் – வா-வா

2. ஓ கால் கரங் கன்னம் குருதி பாயு தின்னம்
உருகுதவர் உள்ளம் உனக்கேன் கல் மனம்
பார் பார் மார்பினில் பார் பாரிலுனக்காய்த்
தாம் பலியானார் – வா-வா

3. ஓ பஞ்சைப் போல் தஞ்சம் -உன் நெஞ்சதனில் கொஞ்சம்
ஓ பஞ்சரித்துக் கெஞ்சும் குரல் கேள் இக்கணம்
கேள்-கேள் நேசர் குரல் வேகமாய்
திறந்திடுவாய் வாசல் – வா-வா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo