
துதி கீதங்களால் புகழ்வேன்
துதி கீதங்களால் புகழ்வேன்
உந்தன் நாம மகத்வங்களை
இயேசுவே இரட்சகா
உந்தன் நாமம் எங்கள் ஆறுதல் – துதி
1. தினத்தோறும் உம் தானங்களால்
நிறைத்திடுமே எங்களை நீர்
திரு உள்ளமது போல் எம்மை மாற்றிடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால் – துதி
2. அலை மோதும் இவ்வாழ்க்கையிலே
அனுகூலங்கள் மாறும்போது
வழிகாட்டிடுமே துணை செய்திடுமே
கனிவோடடியார்களைக் காருண்யத்தால் – துதி