கொள்ளை நோயால் தவிப்போரே – Kollai Noyal Thavippore song lyrics
பல்லவி
கொள்ளைநோயால் தவிப்போரே
கொள்ளைநோயை இயேசு அழிப்பார்
கொள்ளைநோயால் தவிப்போரே
கொள்ளைநோயை முற்றிலும் அழிப்பார்.
தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர் – நம்
தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர்
பிள்ளையைப்போல் நம்மை அவர் அணைப்பார் – 2
சரணம்
கட்டளையை மீறினால் காய்ச்சல் வருமென்றீர்
வானமும் அடையும் கொள்ளை நோயும் வருமென்றீர்
நம்மை தாழ்த்தி அவரிடம் வேண்டிட்டால்
பரிகாரியானவர் பரிகாரம் தந்திடுவார்
பொல்லாத வழிவிட்டு திரும்பியே வந்திட்டால்
மன்னித்து நோய்களை குணமாக்கமாட்டிரோ – யஹோவா ராஃஹா
குணமாக்கமாட்டிரோ
சரணம்
கடலை உலர்ந்த தரையாய் மாற்றினீரே
மக்களை கால்நனையாமல் கடக்க செய்தீரே
கலங்காதே திகையாதே உடனிருப்பேன் என்றீரே
உமைதேடுகின்றோரை கைவிடேன் என்றீரே
இக்கட்டுநேரத்தில் தஞ்சமும் நீரன்றோ
நோய் நொடி பிணி தீர்த்து காத்திடுவீரே – யஹோவா ராஃஹா
சுக வாழ்வு தருவீரே