உம்மைத்துதிக்கிறேன் -Ummai Thuthikkiren
உம்மைத்துதிக்கிறேன்
உம்மைப்புகழுகிறேன்
உம்மை வாழ்த்துகிறேன்
உம்மை வணங்குகிறேன் (2)
நீரே நல்லவர்
நன்மை செய்பவர்
நீரே உண்மையும்
நீதியுமுள்ளவர் (2)
உம்மை ஆராதிப்பதே
உமக்கு மகிமை
உம்மை ஆராதிப்பதே
எனக்கு மேன்மை (2)
உம்மைத்துதிக்கிறேன்
உம்மைப்புகழுகிறேன்
உம்மை வாழ்த்துகிறேன்
உம்மை வணங்குகிறேன் (2)
நீரே கிருபையும்
சத்தியமுள்ளவர்
நீரே இரக்கமும்
உருக்கமும் உள்ளவர் (2)
உம்மை ஆராதிப்பதே
உமக்கு மகிமை
உம்மை ஆராதிப்பதே
எனக்கு மேன்மை (2)
பிதாவே உம்மைத்துதிக்கிறேன்
இயேசுவே உம்மைப்புகழுகிறேன்
ஆவியானவரே உம்மை வாழ்த்துகிறேன்
திரியேகரே உம்மை வணங்குகிறேன் (2)