நிழலாய் வருவீர் நீர்-Nizhalaai Varuveer Neer
நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே
நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும்) – 2
நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே.
1. பாவியாய் நான் மருகும்போது, பாவமெல்லாம் நீக்கிடும்
ரோகியாய் நான் நொறுங்கும்போது, சுகமளிக்கும் பரிசுத்தர்
மனமோ வாழ்த்திப்பாடும், இந்த மண்ணில் உந்தன் நாமம்
நீரே தொடர்ந்து நல்கும் தானம் என்னில் கனிவாய் இரங்கி
நீரே சிலுவை சுமந்தீர் தினமும் எனக்காக தான்.
நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே
நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும்
நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே.
2. தளர்ந்திடாமல் தகர்ந்திடாமல் தேவரீர் என்னை காத்திடும்
வீழ்ந்திடாமல் தாழ்ந்திடாமல் தேவரீர் என்னை பேணிடும்
இதயம் நினைத்துப்பாடும், தயவு நிறைந்த தெய்வசிநேகம்.
நீரே தொடர்ந்து நல்கும் தானம் என்னில் கனிவாய் இரங்கி
நீரே சிலுவை சுமந்தீர் தினமும் எனக்காக தான்.
(நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே
நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும்) – 2
நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே