உயிரோடிருக்கும் மட்டும்- Uyirodirukkum mattum
உயிரோடிருக்கும் மட்டும்
கர்த்தரை பாடுவேன்
உள்ளளவும் என் தேவனை
கீர்த்தனம் பண்ணுவேன்… (2)
காற்றையும் காணல
மழையையும் காணல
வாய்க்காலை வெட்டிட்டேன்
தண்ணீரால் நிரப்புங்க…(2)
கையளவு மேகம் இருந்தா போதுமே
எங்க வாழ்க்கை எல்லாம் செழிப்பாய் மாறுமே (2)
சூழ்நிலையைப் பார்க்கிறேன்
சோர்ந்து போகிறேன்
உங்கள நம்புறேன்
எனக்கு உதவி செய்யுங்க… (2)
வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவரே
உம் வார்த்தையினாலே பிழைக்க செய்யுங்க…(2)
நிற்க பலனில்லை
என்ன செய்வது புரியல
உங்க கரத்தால் பிடியுங்க
என்னை நடத்தி செல்லுங்க…(2)
அடைக்கலப் பட்டணம் எனக்கு நீர்தானே
நீதிமான் அதற்குள் சுகமாய் இருப்பானே…(2)
உயிரோடிருக்கும் மட்டும்
கர்த்தரை பாடுவேன்
உள்ளளவும் என் தேவனை
கீர்த்தனம் பண்ணுவேன்… (2)