பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu
பனி மழை பொழிந்தது அன்று
கடும் குளிர் வீசியது அங்கு
விண்ணை விட்டு மண்ணை நாடும்
மன்னவர் வந்துதித்தார்
விண்ணில் மகிழ்ச்சி மன்ணில் சமாதானம்
மனுஷர் மேல் பிரியம் உண்டாகட்டும்
மாட மாளிகை பல உண்டு
மைந்தன் இயேசுவுக்கோ ஒன்றும் இல்லை
சத்திரமும் சாதித்தது
உமக்கிடம் இல்லை என்று
மூவுலக தேவா உமக்குத்தான்
கந்தை துணியும் முன்னணையும்
பரிசாக கிடைத்ததோ
என்னையும் நீர் ரட்சிக்கவே
வாரும் தேவா என்னுள்ளில்
எந்தன் இதயத்தை தருகிறேன்
எந்தனின் இதயத்தில்
உமக்கிடம் தந்திடுவேன்